எலுமிச்சை சாறு (சாதத்துக்கு)
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
----------------------------------
தாளிக்க:
--------------------------------
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கர்ண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கு
பச்சை மிளகாய் (அ) மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
மிளகாயை இரண்டாக ஒடித்து வைக்கவும். எலுமிச்சை சாறு மற்றும் நீர், உப்பு, மஞ்சள் தூள் ஒன்றாக கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
பருப்பு சிவந்ததும் எலுமிச்சை சாறு கலவையை சேர்த்து மஞ்சள் வாசம் போய் சாறு பாதியாகும் வரை கொதிக்க விடவும்.
குறிப்புகள்:
இதை செய்து வைத்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் சூடான சாதத்தில் கலந்து எலுமிச்சை சாதம் செய்யலாம். விரும்பினால் எண்ணெயில் வறுத்த முந்திரி, வேர்கடலை கூட சாதம் கிளரும் போது சேர்க்கலாம்.