எலுமிச்சை சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பால் - ½ கப்

தண்ணீர் - 1 ½ கப்

எழுமிச்சைப்பழம் – ½ மூடி

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - 1 கொத்து

கடுகு - தாளிக்க

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

செய்முறை:

அரிசியைக் கலைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

இஞ்சி, பச்சைமிளகாயைய் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தவும்.

எழுமிச்சைபழத்தை பிழிந்து கொட்டை நீக்கி வைக்கவும்.

அரிசியைய் பால், தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி ஒரு தட்டில் போட்டு உதிரியாக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக்காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு, நிலக்கடலை, அரைத்து வைத்த இஞ்சி, பச்சைமிளகாய் , மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு உடனே இறக்கவும்.

இதில் சாதத்தைப் போட்டு கிளறினால் சுவையான எலுமிச்சை சாதம் தயார்.

குறிப்புகள்:

கூடுதலாக காரம் விரும்புபவர்கள் தாளிக்கும் பொழுது வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம.