எலுமிச்சை சாதம் (சாதம் மீந்துவிட்டால்)
தேவையான பொருட்கள்:
சாதம் - 3 கப்
எலுமிச்சைப்பழம் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
---------------------------------------------
தாளிக்க::
----------------------------------------------------
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 5 இலை
பச்சை மிளகாய் - 2 நீளமாக அரிந்தது
செய்முறை:
முதலில் எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மீதம் உள்ள சாதத்தில் சேர்த்து கிளறவும்.
இதை அனைத்தும் முன் தினம் இரவே செய்து மறு நாள் காலையில் எழுந்து சாதத்தை தாளித்தால் மட்டும் போதும்.
மறுநாள் காலையில் :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பின் எலுமிச்சை சாதம் கலவையை சேர்த்து கிளறவும்.
சுமார் 5 நிமிடம் வரை சாதத்தை கிளறவும். பின் சூடாக எலுமிச்சை சாதத்தை பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம் நிறைய மீந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி பழைய சோறாக சாப்பிடுவதை விட இப்படி எலுமிச்சை சாதம் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.