எலுமிச்சை சாதம்
0
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம் - ஒன்று
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு, எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை - சிறிது சாதம்
செய்முறை:
எலுமிச்சை சாறு எடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வேர்கடலை சேர்த்து பிரட்டவும்.
எலுமிச்சை கலவை சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.
சாதத்துடன் இந்த எலுமிச்சை சாறு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்தால் சுவையான எலுமிச்சை சாதம் தயார்.