எக் ரைஸ் (1)
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
முட்டை - 2
வெங்காயம் - 2
தக்காளி - 1
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
பச்சைமிளகாய் - 1
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
பிரட் - 2 துண்டுகள்
முந்திரி - 10
நெய் - 2 மேசை கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
பிரட்டை ஓரம் நறுக்கி சிறுசிறு சதுர துண்டுகளாக வெட்டி நெய்யில் பொரித்துகொள்ளவும். முந்திரிப்பருப்பையும் வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் முட்டை,உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
முட்டை நன்கு பொரிந்ததும் தக்காளி வதக்கவும்.
அதன் பின் சாதம்,மிளகுத்தூள் சேர்த்து கிளறவும். அதன் பின் அடுப்பை அணைத்து பிரட் துண்டுகளை சேர்த்து ஒரு முறை கிளறவும்.
பரிமாறும் போது முந்திரியை தூவி அலங்கரிக்கவும்.
குறிப்புகள்:
முட்டை வாசம் பிடிக்கவில்லை என்றால் முட்டையில் உப்பு பாதியளவு மிளகு சேர்த்து நன்கு அடித்து தோசைக்கல்லில் ஊற்றவும். ஆறியதும் கையால் உதிர்த்து சாதத்தில் பிரட் சேர்க்கும் முன் முட்டையை சேர்த்து கிளறவும்.
உடனடியாக செய்துவிடக்கூடிய உணவு. சாஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும். வெறும் சாதமாக கூட சாப்பிடலாம்.