எக் ரைஸ்
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
முட்டை - 2
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
ப்ரெட் - 2 துண்டுகள்
முந்திரி - 10
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
ப்ரெட்டின் ஓரங்களை நறுக்கிவிட்டு சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி நெய்யில் பொரித்தெடுத்துக் கொள்ளவும். முந்திரியை வறுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். முட்டை நன்கு பொரிந்ததும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் சாதம் மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடவும். பிறகு ப்ரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு முறை கிளறவும்.
குறிப்புகள்:
முந்திரியைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.