எக் ஃப்ரைட் ரைஸ் (1)
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 2 அல்லது 4
பாஸ்மதி அரிசி - 1 கப்
நெய், எண்ணெய் கலவை - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
குடை மிளகாய்- சிறிது
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோவிற்கு பதில் சீனி - கால் ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து உதிரியாக வடித்து ஒரு தட்டில் பரத்தி ஆர வைக்கவும். முட்டையை உப்பு மிளகு போட்டு அடித்து வைக்கவும். வெங்காயம், குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் கட் பண்ணவும்.
கடாயில் எண்ணெய் நெய் கலவை விட்டு வெங்காயம், குடை மிளகாய் வதக்கி, உப்பு, சீனி போட்டு, அதன் மேல் அடித்த முட்டை விட்டு உதிரியாக வருமாறு கிண்டவும். சோயா சாஸ் விடவும். சாதம் கொட்டி கிண்டாமல் குலுக்கி எடுக்கவும். பின்பு ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும்.
சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி.