உளுந்து சோறு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்

முழு உளுந்து - 1/2 கப்

தேங்காய் பால் + தண்ணீர் - 3 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - 2 தே,க

சின்ன வெங்காயம் = 10 பொடியாக அரிந்தது

வெண்ணெய் - 50 கி + 1 டீஸ்பூன் எண்ணெய்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - கொஞ்சம்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

ஒரு அகலமான சட்டியை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிவந்ததும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து அடிபிடிக்காமல் கிண்டி விடவும்

தேங்காய் பாலையும், தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.

லேசாக கொதித்து நுரை போன்று வந்ததும் அரிசி,உளுந்து,உப்பு,கறிவேப்பிலை சேர்த்து மூடி வேக விடவும்

குறிப்புகள்:

மட்டன் கறி, சிக்கன் கறியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்