உளுந்தம்பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி 1 கப்
உடைத்த உளுந்து - 1/4 கப் ( தொலியுடன்)
வெந்தயம் - சிறிது
தேங்காய் துருவல் - 1/2 தேங்காய்
பூண்டு பல் - 15
உப்பு - 2 தேக்கரண்டி
தாளிக்க தேவையானவை
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி (தட்டியது) - 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
அரிசி பொன்னி அரிசி இல்லாமல் சற்று பருமனாக உள்ள அரிசியை ( இட்லி அரிசி, சம்பா அரிசி) எடுத்து கொள்ளவும்
உளுந்து கருப்பு தோலுடன் (உடைத்தது) உள்ளதை எடுத்து வெந்தயம் சேர்த்து வெறும் வாணலியில் எண்ணெய் இல்லாமல் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சிவக்க தேவையில்லை
அதே வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, இஞ்சி (தட்டியது) , கறிவேப்பிலை போட்டு தாளித்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் அரிசி, வறுத்த உளுந்து ,வெந்தயம், தேங்காய் துருவல், பூண்டு பல், உப்பு, தாளித்தவை அனைத்தயும் போட்டு 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து 1/4 மணி நேரம் ஊற வைத்து வேக விடவும்
3 விசில் வந்தால் போதும் . தண்ணீர் அளவில் 2 1/2 கப் வைத்துக் கொண்டு 1 கப் தேங்காய் பாலும் சேர்த்துக் கொள்ளலாம்
குக்கரில் தம் போட்டும் செய்யலாம் தம் போடுவதாக இருந்தால் இன்னும் 1 கப் தண்ணீர் அதிகமாக வைக்கவும்
குக்கரில் மூடி போடாமலே இடைஇடையே கிண்டி கொள்ளவும்
அரிசி முக்கால் பாகம் வெந்ததும் குக்கர் மூடியை போட்டு வெயிட் போடாமல் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
தம் போட்டு செய்வது குக்கரில் வெயிட் போட்டு செய்வதைவிட ருசியாக இருக்கும்
இதற்கு தொட்டுக் கொள்ள மட்டன் குழம்பு, கருவாட்டு குழம்பு நன்றாக இருக்கும்.
எள்ளு துவையல் , கத்தரிக்காய் தொக்கும் நன்றாக இருக்கும்