உருளை பட்டாணி சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டாணி - நூறு கிராம்

பாஸ்மதி அரிசி - ஒரு டம்ளர்

பெரிய வெங்காயம் - ஒன்று

காய்ச்சிய பால் - ஒரு டம்ளர்

தண்ணீர் - அரை டம்ளர்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

உருளை - ஒன்று

நெய் - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி ,புதினா - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - மூன்று

உப்பு - தேவையான அளவு.

-------------------------

தாளிக்க

------------------------------

எண்ணெய் - தேவையான அளவு

ஏலக்காய்,பட்டை,லவங்கம் - ஒன்று ஒன்று

பிரிஞ்சி இலை - ஒன்று

சீரகம் - அரை தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை கழுவி இருபது நிமிடம் ஊறவைக்கவும்,வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டவும்,உருளையை சின்னதாக நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,பின் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின் உருளை,பட்டாணியை சேர்த்து கிளறவும்.அதன் பின் அரிசி, புதினா,கொத்தமல்லி இலை சேர்த்து நெய் விட்டு வதக்கவும்.

அதன் பின் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி பத்து நிமிடம் சிம் இல் போட்டு வைக்கவும்.

பிரசர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

குறிப்புகள்: