உருளைக்கிழங்கு சாதம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

அரிசி(பொன்னி/பாசுமதி/ஜஸ்மின்) - 1/2 கப்

வெங்காயம் - 2

பூண்டு - 4 பல்

கறித்தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் - சிறிது

மிளகாய் வற்றல் - 2

கடுகு - சிறிது

பெருஞ்சீரகம் - சிறிது

உளுத்தம் பருப்பு - சிறிது

கடலைப்பருப்பு - சிறிது

முந்திரி - சிறிது

நிலக்கடலை - சிறிது

திராட்சை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை களைந்து குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பூண்டு

வெங்காயம் இரண்டையும் தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அதில் கறித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை போட்டு பிரட்டி விடவும்.

இந்த உருளைக்கிழங்கு கலவையுடன் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து நன்கு ஒன்றாகும்படி கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் ருசிக்கு ஏற்றவாறு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, நிலக்கடலை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார். பரிமாறும் போது ஒரு தட்டில் சாதத்தை வைத்து மேலே வறுத்த முந்திரி, திராட்சை, கடலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: