ஈஸி வெஜிடபிள் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - கால் கிலோ (2 கப்)

பெரிய வெங்காயம் - 2

காரட் - 1

பச்சை பட்டாணி - 100 கிராம்

பீன்ஸ் - 10

காலிஃப்ளவர் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - சிறிது

பூண்டு - 10 பல்

பட்டை - சிறிது

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

பிரிஞ்சி இலை - சிறிது

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயத்தை நீளமாக, சன்னமாக நறுக்கவும்.

காரட், பீன்ஸை அரை அங்குல சன்ன துண்டுகளாக நறுக்கவும்.

காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும்.

ரைஸ் குக்கர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி பிரிஞ்சி இலை தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

காய்கள் சேர்த்து ஒரு கிளறு கிளறி (வதக்க வேண்டாம்) அரிசி சேர்த்து கிளறி, 4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

பாத்திரத்தை ரைஸ் குக்கரில் வைத்து ஆன் செய்யவும்.

5 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து கலக்கி மூடவும்.

தானாக வார்மர் நிலைக்கு வந்ததும் 10 நிமிடம் கழித்து திறந்து, சாதம் உடையாமல் கலக்கி பரிமாறவும். வெள்ளை வெளேரென்று பார்க்க அழகாக இருக்கும்.

குறிப்புகள்:

குக்கரிலும், தனியாகவும் கூட இந்த முறையில் செய்யலாம்.

தொட்டுக்கொள்ள சிக்கன் குருமா, மட்டன் குருமா, உருளைக்கிழங்கு-பட்டாணி குருமா, ராய்த்தா நன்றாக இருக்கும்.