ஈஸி புளிசாதம்
0
தேவையான பொருட்கள்:
மீதமான சாதம் - தேவைக்கேற்ப
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கடலை பருப்பு - 3 தேக்கரண்டி
செய்முறை:
புளியை ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைக்கவும். இரவில் மீந்த சாதத்தை எடுத்துக் கொள்ளவும்.
சாதத்தில் புளி கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்., சாதத்தை நன்கு கிளறி விட்டு இரவு முழுவதும் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் கடலை பருப்பை சேர்த்து தீய விடாமல் வறுக்கவும்.
அதனுடன் ஊற வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.