ஈஸி பட்டாணி சீரக ரைஸ்
0
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் (வேக வைத்தது) - ஒரு கப்
பச்சை பட்டாணி (வேக வைத்தது) - கால் கப்
எண்ணெய் அல்லது நெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
பூண்டு - 4
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 5
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் (அல்லது) நெய் ஊற்றி சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த பச்சை பட்டாணி உப்பு போட்டு வதக்கவும்.
வதக்கியவற்றுடன் வேக வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து மெதுவாக பிரட்டி விட்டு அதன் மேல் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி போடவும்.