ஈஸி ஃப்ரைடு ரைஸ்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

பீன்ஸ் – 50 கிராம்

காரட் – 50 கிராம்

பச்சை பட்டாணி(frozen) – 50 கிராம்

முட்டை – 2

மிளகு தூள் – ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பீன்ஸ், காரட் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியை இரண்டு பங்கு தண்ணீர் மற்றும் உப்பு(முக்கால்வாசி) சேர்த்து பதமாக வடித்து வைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு முட்டை இரண்டையும் உடைத்து ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பீன்ஸ், காரட் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வதங்கிய பின் பச்சை பட்டாணி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும், பின்னர் இதனுடன் மிளகு தூள், உப்பு (கால்வாசி), பொரித்த முட்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இந்த காய்கறி கலவையில் வடித்த சாதத்தை சேர்த்து கிண்டி இறக்கவும்.

ஈஸியான ஃப்ரைடு ரைஸ் தயார்.

குறிப்புகள்: