ஈசி தேங்காய்பால் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்

தேங்காய் பால் - 2 கப்

தண்ணீர் - 1 1/2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 5

இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி

பட்டை - 1

கிராம்பு - 3

பிரிஞ்சி இலை - 2

சோம்பு - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

முதலில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு, சீரகம் போட்டு பின்னர் கறிவேப்பிலை சேர்த்து, அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

அதனுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.

இப்போது ஒரு முறை கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்து பின்னர் இறக்கி விடவும். (நான் ஒரு விசில் வந்ததும் கேஸை நிறுத்தி விட்டு குக்கரை வேறு இடத்தில் வைத்து விடுவேன். இதனால் அரிசி குழையாமலும் அடிபிடிக்காமலும் பொல பொலவென்று இருக்கும்.) சுவையான ஈசி தேங்காய் பால் சாதம் ரெடி.

குறிப்புகள்: