ஈசி தயிர் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - 1 கப்

தயிர் - 3/4 கப்

சின்னவெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி - சிறு துண்டு

உப்பு - தேவையான அளவு

பெருங்காயதூள் - 1 சிட்டிகை

எண்ணை - 2 ஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை:

தயிரில் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.

வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை.இஞ்சி பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து ,வெங்காயம்,மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சாதம் போட்டு, கரைத்த தயிர்,தாளித்தவெங்காயம்,பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

குறிப்புகள்: