ஈசி தக்காளி சாதம்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2

மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி வறுத்து பொடிக்க

உதிரியாக வடித்த சாதம் - இரு கப்

------------------------------------

தாளிக்க:

-----------------------------------------

கடுகு - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

நன்கு பழுத்த தக்காளியாக இருந்தால் நல்லது. புளிப்பும் கலரும் நன்றாக இருக்கும்.

வெறும் கடாயில் ஒரு தேக்கரண்டி கடுகு போட்டு பொரிய விடவும். கடுகு தீயக் கூடாது. பிறகு அதை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.

தக்காளியை கழுவி நறுக்கி சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், உப்பு சரிப்பார்க்கவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.

கடைசியில் வறுத்து, பொடித்த கடுகு தூவி அடுப்பை அணைத்து விடவும்.

இதனுடன் உதிரியாக வடித்து ஆற வைத்த சாதம் சேர்த்து கலந்தால் கிட்ஸ் தக்காளி சாதம் தயார். குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் வைக்க ஏற்றது. நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.

குறிப்புகள்: