ஈசி சாம்பார் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொன்னி அரிசி - 1 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

வெள்ளை மொச்சை - 1/4கப் (2 மணிநேரம் ஊறவைக்கவும்)

சாம்பார் பொடி - 3 முதல் 4தேக்கரண்டி

பெருங்காயப்பொடி - 1/4தேக்கரண்டி

புளி - சிறு நெல்லிக்காய் அளவு

சின்ன வெங்காயம் - 12

பச்சை மிளகாய் - 2

கேரட் - 1/2

கத்திரிக்காய் - 1

முருங்கைக்காய் - 1 சிறியது

சௌசௌ - 1/2

உருளைக்கிழங்கு - 1சிறியது

தக்காளி -1

கறிவேப்பிலை -1இனுக்கு

மல்லிக்கீரை - கைப்பிடி அளவு

உப்பு - தேவையான அளவு

--------------------------

தாளிக்க:

-------------------------

நெய் - ஒன்றரை மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

கறிவேப்பிலை - 1 இனுக்கு

செய்முறை:

அரிசி பருப்பைக் களைந்து வைக்கவும்.

காய்கறிகளை சாம்பாருக்கு வெட்டுவது போல் சிறு துண்டுகளாக்கவும்.(அவரவர் விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்)

அரிசி பருப்புடன் ஊறவைத்த மொச்சை, சின்ன வெங்காயம் வெட்டிய காய்கள், கறிவேப்பிலை சேர்க்கவும்.

அரைக்கப் தண்ணீரில் புளியைக்கரைத்து சேர்க்கவும்.

சாம்பார் பொடி, பெருங்காயம், உப்பு சேர்க்கவும்.

நாலரைக் கப் தண்ணீர் சேர்த்து கிளறி உப்பு புளி காரம் சரி பார்த்துக் கொள்ளவும்.

குக்கரில் வைத்து முதல் விசில் வந்தவுடன் தீயைகுறைத்து மேலும் 4விசில் வரும் வரை வேக விடவும்.

பிரஷர் அடங்கியதும் திறந்து தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

மல்லிக்கீரையும் சேர்த்து நன்கு கிளறவும்.

குறிப்புகள்:

வறுத்தரைத்த துவையலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குக்கரைத் திறந்தவுடன் தண்ணீர் நிறைய இருப்பது போல் இருக்கும். ஆற ஆற இறுகி விடும்.

மொச்சை இல்லை யென்றால் கொண்டைக்கடலையும் சேர்க்கலாம்.

வெந்நீரில் ஊறவைத்தால் ஒரு மணி நேரம் ஊறினால் போதுமானது.