ஈசிஃப்ரைட்ரைஸ்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சாதம் - 1கப்

காரட், பீன்ஸ், கோஸ், குடைமிளகாய் எல்லாம் சேர்த்து - 1/2 கப் நீளமாக நறுக்கியது

வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 1

சீரகம் - 1/4 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்

அஜனமோட்டா- 1/4 டீஸ்பூன் (விரும்பினால்)

மல்லி இலை - சிறிது

வெள்ளைமிளகு - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கி (வெங்காயம் சிவக்ககூடாது) அதனுடன் காய்களையும் சேர்த்து வதக்கவும்.

காய் முக்கா வேக்காட்டில் இருக்கும் பொழுது அஜனமோட்டோ ,சோயாசாஸ், வெள்ளைமிளகு உப்பு சேர்த்து கிளறி பின் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும் மல்லி இலைதூவி பரிமாறவும்

குறிப்புகள்:

சாதம் மீதமானால் இப்படி செய்யலாம் முட்டை சேர்க வேண்டுமானால் தனியாக கடாயில் வதக்கி சேர்க்கலாம்