இன்ஸ்டன்ட் முட்டை தக்காளி சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - 3 கப்

நெய் - 2 ஸ்பூன்

எண்ணை - 2 ஸ்பூன்

பட்டை - 3

கிராம்பு - 2,

ஏலக்காய் - 3

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

தக்காளி - 1

மல்லி இலை புதினா இலை - பொடியாக நறுக்கியது 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

உப்பு - 1.5 ஸ்பூன்

தண்ணீர் - 6 கப்

--------------------------------------

முட்டைக்கு

------------------------------------------

முட்டை - 3

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி தண்ணீரில் போடவும்

பிறகு சாதத்திற்கு உயரம் குறைந்த பெரிய வாயகன்ற குக்கரை எடுத்துக் கொள்ளவும்

அதில் எண்ணை மற்றும் நெய் காயவைத்து பட்டை கிராம்பு ஏலம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பச்சமிள்காய் சேர்த்து வதக்கவும்

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

பின்பு தக்காளி,மல்லி இலை,புதினா சேர்த்து குழைய வதக்கவும்

பின்பு மஞ்சள் தூள் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து ஆறு கப் தண்ணீர் ஊற்றி ஊறவைத்த அரிசியை வடித்து கொட்டி குக்கரை மூடி விடவும்

2 விசில் வரும் வர விடவும்

இப்போது முட்டைக்கு முட்டை ,வெங்காயம் மற்றும் பச்சை மிள்காயை சேர்த்து கலக்கி பனியார சட்டியில் வைத்து குழுயில் முட்டை கலவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்

இப்போது ப்ரஷர் அடங்கிய குக்கரை திறந்து பொரித்த முட்டைகளை சேர்த்து 1/2 ஸ்பூன் நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி விடவும்

குறிப்புகள்:

இதனை பயனநேரங்களில் சுலபமாக செய்து கொண்டு செல்வது வழக்கம்.

புளி,எலுமிச்சை சேர்த்த துவையல்,அப்பளம் அல்லது வடகம் இருந்தால் சுவை அலாதியாக இருக்கும்.