இனிப்பு சாதம் (குழந்தைகளுக்கு)
0
தேவையான பொருட்கள்:
சாதம் கொஞ்சம் நன்றாக அதே சமயம் குழையாமல் வேக வைத்தது - ஒரு கப் (உப்பு கால் தேக்கரண்டி போட்டு வேக வைத்தால் போதும்)
சர்க்கரை - 2 தேக்கரண்டி
பால் - அரை கப் (பசும்பால் அல்லது தேங்காய்ப் பால்)
பழம் நன்கு பழுத்தது - ஒன்று
செய்முறை:
சாதத்தை ஒரு கரண்டியால் உடைத்துக் கொள்ளுங்கள்.
மசித்த சாதம், பால், சர்க்கரை சேர்த்து கலந்து கொண்டு பழத்தை பொடியாக நறுக்கி போடுங்கள். தட்டில் போட்டு பரிமாறுங்கள்