இனிப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
கடலைப்பருப்பு - கால் கப்
நெய் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
இலவங்கம் - 8
பட்டை - 4 சிறியத் துண்டுகள்
ஏலக்காய் - 6
செய்முறை:
அரிசியைக் கழுவி, களைந்து ஒரு துணியில் பரப்பிக் காயவிடவும்.
கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துத் தண்ணீர் வடித்துக் காய விடவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நெய்யை விட்டுக் கொதிக்கவிடவும்.
ஏலக்காய், பட்டை ஆகியவற்றை போட்டுத் தாளித்து அரிசியைக் கலந்து ஓரளவு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக கடலைபருப்பைப் போட்டுத் தீயைக் குறைக்கவும்.
இரண்டு கப் சுடு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு பத்து நிமிடங்கள் வேகவிடவும்.
பின்னர் சர்க்கரை சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிடில் அடிபிடித்துவிடும்.
நெய் தனியாக பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்ப் பொடியைத் தூவிப் பரிமாறவும்.