இஞ்சி சாதம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒரு கப்

பிரிஞ்சு இலை - ஒன்று

பட்டை - ஒரு சிறு துண்டு

லவங்கம் - 4

ஏலக்காய் - 2

வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)

தக்காளி - ஒன்று (மிக்ஸியில் அடித்தது)

கொத்தமல்லி - சிறிது

புதினா - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

--------------------

அரைக்க :

--------------

இஞ்சி - ஒரு சிறு துண்டு

மிளகாய் வற்றல் - 3

பூண்டு - 5 பல்

சோம்பு - கால் தேகரண்டி

முந்திரி - 5

செய்முறை:

அரைக்க வேண்டிய அனைத்தையும் ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சு இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரியவிடவும்.

இதில் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் அடித்துவைத்த தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்பொழுது அரைத்த இஞ்சி விழுதையும் சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கவும்.

இதில் கழுவிய அரிசி, உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி வழக்கமாக சாதம் சமைப்பது போல் சமைக்கவும்.

குறிப்புகள்: