ஆனியன் ரைஸ் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு ஆழாக்கு (சாதமாக வடித்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 2
கொத்தமல்லித்தழை - 2 கொத்து
தனி மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
கரம்மசாலாத் தூள் - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 1 1/4 தேக்கரண்டி
செய்முறை:
சாதத்தை வடித்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கிலும்
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடிக்க விடவும். அதில் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் அரைப்பதம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் கரம் மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விடவும்.
நன்கு மசாலாப் போல் வந்ததும் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.
அதில் வடித்த உதிரியான சாதத்தை போட்டு கிளறி விடவும். மசாலாவுடன் சாதம் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கி வைக்கவும்.
இறக்கி வைத்து சாதத்தின் மேல் நெய் ஊற்றி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.