ஆனியன் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - கால் கிலோ

சாதம் - ஒரு கப்

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - முழுதாக ஒன்று

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பச்சை மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - சிறிதளவு

சீரகத்தூள் - கால் தேக்கரண்டி

கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி

கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

கடாய் சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைபருப்பு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் பெருங்காயத்தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

அதன் பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பொடியாய் நறுக்கிய இஞ்சி பாதியாய் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

சுருண்டதும் சாதம் கொட்டி கிளறவும். 2 நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கவும்.

குறிப்புகள்:

டொமேட்டோ சாஸ், சிப்ஸ், கிரேவி வகைகள் உடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.