அரிசி பருப்பு சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 டம்ளர்.

துவரம் பருப்பு - 3/4 டம்ளர்

காய்ந்த மிளகாய் - 5

சிறிய வெங்காயம் - 10

தக்காளி - 2

பட்டை - சிறிது

கிராம்பு - 1

கறிவேப்பிலை - சிறிது

கொத்துமல்லி - சிறிது

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 ஸ்பூன்.

நெய் - 2 ஸ்பூன்.

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கழுவி, 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, தாளித்து, கிள்ளிய மிளகாய், முழு வெங்காயம், நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அரிசியும் பருப்பும் முக்கால் பதம் வெந்ததும், வதக்கியவற்றையும், உப்பும் சேர்த்து நன்கு கிளறவும்.

நெய்யையும் கொத்தமல்லியையும் சேர்த்து, மூடி வைத்து பதமாக இறக்கவும்.

குறிப்புகள்:

குக்கரில் வைப்பதானால், அரிசி, பருப்பு, தண்ணிர், வதக்கியவை, உப்பு எல்லாம் சேர்த்து, 2 விசில் விட்டு இறக்கவும்.