அரிசி பருப்பு சாதம் (குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெந்த சாதம் - ஒரு குழிக்கரண்டி

வெந்த துவரம் பருப்பு - கால் கப்

------------------------

தாளிக்க:

---------------------

நெய் (அ) பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

பூண்டு - ஒரு பல்

காய்ந்த மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை - சிறிது பொடியாக அரிந்து கொள்ளவும்

செய்முறை:

முதலில் பாதி நெய் விட்டு, அதில் காய்ந்த மிளகாய், கடுகு, பூண்டு பொடியாக நறுக்கி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து முதலில் பருப்பை போட்டு கிளறி விட்டு சாதத்தை போட்டு நல்ல மசித்து மசித்து கிளறவும்.

கடைசியில் மீதி நெய்யையும் ஊற்றி கிளறவும். கிளறி முடித்ததும் காய்ந்த மிளகாயை எடுத்து விட வேண்டும். இல்லை என்றால் அதில் காரமாகி விடும்.

குறிப்புகள்:

குழந்தைகளுக்கு என்று தனியாக தயாரிக்க முடியவில்லை என்றால் சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதிலிருந்து கால் கப் எடுத்து கொள்ள வேண்டும்.

இது ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது வரை கொடுக்கலாம், பிறகு பல் முளைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து கொடுக்கலாம்.