அரிசி பருப்பு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாப்பாட்டு அரிசி - ஒரு டம்ளர்

துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 8 பல்

உப்பு - தேவையான அளவு

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 4 கறிவேப்பிலை

தக்காளி - ஒன்று

எண்ணெய் - தாளிக்க

நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

அரிசி, பருப்பை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து வைக்கவும்.

தக்காளி, பச்சைமிளகாய் இரண்டையும் நறுக்கி வைக்கவும். வெங்காயம், பூண்டை உரித்து வைக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.

பின் அதில் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் அரிசி பருப்பை சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.

அதன் பிறகு 3 டம்ளர் தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் வற்றியதும் கலவையை குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்:

பரிமாறும் போது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.