அரிசி கிச்சடி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
மசூர் தால் (மைசூர் பருப்பு) - 1/4 கப்
புதினா - ஒரு கைப்பிடி
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - ஒன்று
பச்சைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீ.ஸ்
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
லெமன் ஜுஸ் - 1/4 ஸ்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையானளவு
செய்முறை:
அரிசியுடன் பருப்பை சேர்த்து கழுவிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, புதினா அரிந்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்து
கீறிய பச்சைமிளகாய் சேர்க்கவும்.
பிறகு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்.
2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பிறகு கழுவி வைத்த அரிசி பருப்பை சேர்த்து மூடி ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஸ்டீம் அடங்கியதும் கொத்தமல்லித் தழை லெமன் ஜுஸ் சேர்த்து கிளறிவிடவும். தயிர் பச்சடியுடன் சாப்பிடவும்.