அரிசியும் பருப்பு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒண்ணே கால் கப்

அவரை பருப்பு - முக்கால் கப்

சின்ன வெங்காயம் - கைப்பிடி

தக்காளி - ஒன்று

மஞ்சள் தூள் - சிறிது

------------------

வதக்க:

-----------------

கறிவேப்பிலை - 2 கொத்து

பச்சை மிளகாய் - 5

நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

-------------------------

தாளிக்க:

------------------------------

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

நெய் - ஒரு தேக்கரண்டி

கடுகு - சிறிது

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மிளகு - அரை தேக்கரண்டி

வேர்க்கடலை - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி

முந்திரி - 5

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். அரிசியையும், பருப்பையும் சேர்த்து களைந்து ஊற வைக்கவும்.

குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.

பின் வதக்க கொடுத்தவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.

பின் அரிசியையும் பருப்பையும் போட்டு சரியாக மூன்று விசில் வந்ததும் இறக்கி பிரஷர் அடங்கியதும் திறக்கவும்.ss

குறிப்புகள்:

வறுவல் மற்றும் அசைவத்திற்கு ஏற்ற சிம்பிளான சுவையான சாதம்.