அன்னாசிப்பழ பொங்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மிகவும் பொடியாக நறுக்கப்பட்ட அன்னாசிப்பழம் - 1 கப்

பச்சரிசி - 2 கப்

சீனி - 1 கப்

திராட்சை - அரை கப்

முந்திரிப்பருப்பு - கால் கப்

பால் - 2 கப்

தண்ணீர் - 4 கப்

தேங்காய்த்துருவல் - அரை கப்

ஏலப்பொடி - 1 ஸ்பூன்

குங்குமப்பூ - 2 சிட்டிகை

பைனாப்பிள் எஸென்ஸ் - 1 ஸ்பூன்

நெய் - கால் கப்

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

பாலையும் தண்ணீரையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குங்குமப்பூவும் சேர்த்து சிறு தீயில் குழைய வேக வைக்கவும்.

தனியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி நெய்யை ஊற்றவும்.

திராட்சை, முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல்-இவைகளை ஒவ்வொன்றாய் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

அதே வாணலியில் அன்னாசிப்பழத்துண்டுகளைப் போட்டு சிறிது நீர் சேர்த்து அவை நன்கு வெந்ததும் சீனியைச் சேர்த்து கெட்டியானதும் இதை சாதம் நன்கு குழைந்து வெந்து வரும்போது அதனுடன் சேர்க்கவும்.

உப்பு, ஏலப்பொடி, எஸென்ஸ், வறுத்த பொருட்களைச் சேர்க்கவும். சிறுதீயில் வைத்து கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும், தேவையானால் சிறிது நெய்யை ஊற்றிக் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: