அக்கார அடிசில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
குங்குமப்பூ - கால் தேக்கரண்டி
முந்திரி - 12
திராட்சை - 12
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
பால் - 4 கப்
நெய் - கால் கப்
செய்முறை:
சுத்தமான பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் சேர்த்து கழுவிக்கொள்ளவும்.
பாலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். பால் பொங்கியதும் அதில் அரிசி, பருப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்.
வெல்லத்தைப் பொடித்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தனியே ஒரு பாத்திரத்தில் சூடு படுத்தவும். வெல்லம் பாகாய் கரைந்தவுடன் எடுத்து வடிகட்டி, வெந்து கொண்டிருக்கும் சாதக் கலவையில் சேர்க்கவும்.
அத்துடன் சர்க்கரை மற்றும் பாதியளவு நெய் சேர்த்து பத்து நிமிடங்கள் கிளறவும்.
சற்று கெட்டியானதும், ஏலப்பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி பாலில் கரைத்த குங்குமப்பூவை அதில் சேர்த்துக் கலக்கவும்.
முந்திரி, திராட்சையை மீதமுள்ள நெய்யில் வறுத்து சாதத்தில் சேர்த்துக் கிளறவும். பொங்கல் பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.