ஃப்ரைட் ரைஸ் (2)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - கால் கிலோ

பீன்ஸ் - 50 கிராம்

கேரட் - 50 கிராம்

முட்டைகோஸ் - 50 கிராம்

குடைமிளகாய் - ஒன்று

சோயா சாஸ் - 2 தேக்கரண்டி

கிரீன் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி

வெள்ளைமிளகு தூள் - காரத்திற்கேற்ப

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் காய் வகைகளை ஒரே அளவில் நீள நீளமாக நறுக்கவும்.

பாஸ்மதி அரிசியை உதிர் உதிராக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பீன்ஸ். கேரட் காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

அதோடு முட்டைகோஸ், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து லேசாக வதக்கவும்.

அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய காய் கலவையில் சாதம், மிளகுதூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். பின் மீண்டும் அடுப்பில் 2 நிமிடம் வைத்து கிளறி இறக்கவும்.

குறிப்புகள்:

இதனுடன் கோழி குருமா, வெஜ் குருமா, ஆனியன் ரைத்தா வைத்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.