ஃப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - 3 கப்

கேரட் - ஒன்று

பீன்ஸ் - 7

பெரிய வெங்காயம் - ஒன்று

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 3

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - அரை அங்குல துண்டு

பூண்டு - 10

சோம்பு - முக்கால் தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி + கால் தேக்கரண்டி

செய்முறை:

கேரட் மற்றும் பீன்ஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் வைத்து நன்கு சூடுப்படுத்தவும். அதில் பொடியாக நறுக்கின கேரட்

பீன்ஸை போட்டு 10 நிமிடம் வேக வைத்து அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதனுடன் வேக வைத்த கேரட், பீன்ஸை போட்டு 3 கிளறி விட்டு பிறகு உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும்.

அதில் வேக வைத்த சாதத்தை போட்டு நன்றாக கிளறி விடவும். மேலே 2 தேக்கரண்டி நெய் ஊற்றி ஒன்றாக கிளறி விடவும்.

அதன் மேலே கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி பரிமாறவும்.

எளிதில் சுவையாக செய்யக்கூடிய ஈஸி ப்ரைட் ரைஸ் தயார்.

குறிப்புகள்: