ஸ்பெஷல் ரசம்

on on off off off 4 - Ok!
2 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி களைந்த தண்ணீர் - 1 டம்ளர்

பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1 டம்ளர்

புளி - ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு

தக்காளி - 1

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மல்லி விதை - 1 தேக்கரண்டி

வர மிளகாய் - 1

பூண்டு பல் - 4

வெல்லம் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

புளியை அரிசி களைந்த தண்ணீரில் ஊற விடவும். மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும். பூண்டு பல்லை தட்டி எடுக்கவும்.

ஒரு வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து ஊற்றவும். உப்பு, தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

5 நிமிடம் கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு கொதிக்க விடவும். 3 நிமிடம் கொதித்ததும் பருப்பு தண்ணீர் சேர்க்கவும்.

ரசம் நுரை கட்டியதும் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, வெல்லம் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: