ஸ்பெசல் தக்காளி ரசம்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3

சீரகம் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

மிளகு - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

பூண்டு - 3 பல்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

அதனுடன் பெருங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெயில் கடுகு, நசுக்கிய பூண்டு, தூளாக்கிய சீரகம், மிளகு, தாளித்து கொட்டி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: