வேப்பம்பூ ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சம் பழம் அளவு (கரைத்த தண்ணீர்)

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 4

கரிவேப்பிலை - 2 இனுக்கு

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணைய் - 1 தேக்கரண்டி

கடுகு,உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் வத்தல் - 3

வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி

நன்றாக பிசைந்து கரைத்த தக்காளி - 2

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி

வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்த வேப்பம்பூ - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பிலை தாளித்து அதில் வெந்தய்ப் பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும்.

அதனுடன் பூண்டு,உப்பு, கரைத்த தக்காளி இவற்றை போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.

நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று முக்கியமாக செய்யும் ரசம் இது.