வெங்காய ரசம் (2)
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 4
துவரம் பருப்பு - 50 கிராம்
உலர்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மல்லிவிதை - 1/2 மேசைக்கரண்டி
மிளகு - 3/4 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கருப்பட்டித்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பருப்பினை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு மிளகாய், பெருங்காயத்தூள், மல்லிவிதை, மிளகு, ஒரு பல் பூண்டு ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்து, அரைக்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயத்தினையும் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
இக்கலவையுடன் வேக வைத்துள்ள துவரம்பருப்பினைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அத்துடன் 4 டம்ளர் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு அடிக் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், ஒரு பல் பூண்டு, சீரகம் ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு அதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கொதித்த பின்பு ஒரு தேக்கரண்டி கருப்பட்டித் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை ஆகியவற்றைப் போட்டு இறக்கி பரிமாறவும்.