வெங்காய ரசம் (1)
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
துவரம்பருப்பு - 1/2 டம்ளர்
தனியா - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை நன்கு வேக வைக்கவும்.
புளியைக் கரைத்து, உப்பு, பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
எண்ணெயில் தனியா, மிளகாய், கடலைப்பருப்பு, மிளகு வறுத்து எடுத்து, தேங்காய், வெங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்தவற்றை கொதிக்கும் புளித்தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பருப்பைக் கடைந்து, தேவையான தண்ணீரோடு, புளித்தண்ணீரில் சேர்த்து, பொங்கி வந்ததும் இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும்.