வெங்காய ரசம்
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 4
புளி - ஒரு எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1/4 கப்
தக்காளி - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தபருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
பெருங்காயம் - 1 சிட்டிகை
கொத்தமல்லி தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும் .
தக்காளியை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்
புளியை நன்றாக கரைத்துக் கொள்ளவும்.பின் அதில் 1 டம்லர் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் பெருங்காயத்தை போடவும்.
மிளகு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டினை மிக்ஸியில் அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணை சூடாக்கி கடுகு,உளுந்த பருப்பு, கருவேப்பிலை போடவும்.கடுகு வெடித்தவுடன் சின்ன வெங்காயத்தை போடவும்.1 நிமிடம் வதக்கிய பின் தக்காளியை போடவும்.
தக்காளி வதங்கிய பின்,மிக்ஸியில் அரைத்த கலவையை போட்டு,புளி தண்ணீரை ஊற்றவும்.
துவரம் பருப்பை நன்கு மசித்து போடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து,ரசம் கொதிக்க ஆரம்பம் ஆகும் போது இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.