வெங்காயம் சேர்த்த ரசம்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சை அளவு

தக்காளி - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

தனியா - 1/2 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 4

பூண்டு - 4 பல்

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - 10

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 6

செய்முறை:

புளி முதல் கறிவேப்பிலை வரை உள்ள அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, (பூண்டு வாசனை பிடித்தவர்கள் ஒரு பல் பூண்டை நசுக்கிப் போடலாம்) அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு பொங்கி வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாயும் சேர்க்கலாம்.