ரசம் (3)
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கொதிக்கவைக்க:
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 12
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - மூன்று கொத்து
பெருங்காயத்தூள் - ஒரு பின்ச்
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்
கடைசியில் தூவ கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
புளியை மூன்றை டம்ளர் தண்ணீரில் கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, ரசப்பொடி, தக்காளியை முழுவதும் வெட்டாமல் நான்காக நறுக்கி அப்படியே போட்டு தீயை குறைத்து கொதிக்க விடவும்.
ஒரு பத்து நிமிடம் கொதித்ததும் இறக்கி லேசாக தோலை எடுத்தால் வந்துவிடும்.
தோலை மட்டும் எடுத்து தக்காளி முழுசாக இருக்கட்டும். அப்பதான் பார்க்க அழகாக இருக்கும். தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து ஊற்றவும்.
தாளிக்கும் போது பூண்டை முந்திரி போல் வறுக்கவும்.