ரசம் (2)
தேவையான பொருட்கள்:
புளி - சிறிய எலுமிச்சை பழம் அளவு
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 3 பெரிய பற்கள்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1/4 தேக்கரண்டி
நச்சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகு - 6
தேங்காய்ப்பூ - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - சிறிதளவு
வற்றல் - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி புளிகரைசலுடன் சேர்த்து கொள்ளவும் .
சின்ன வெங்காயம், பூண்டு தோல் உரிக்காமல் கழுவி கொள்ளவும்.
சோம்பு, நச்சீரகம், மிளகு மூன்றையும் லேசாக வறுத்து கொள்ளவும்.
அம்மியில் வறுத்த பொருட்களுடன் தேங்காய் பூ சேர்த்து லேசாக இடிக்கவும் .
பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தட்டி எடுத்து கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நச்சீரகம், விதை நீக்கிய வற்றல் போட்டு தாளிக்கவும் .
அதில் இடித்து வைத்துள்ள பொருட்களை போட்டு மஞ்சள் தூள் சேர்த்து தாளிப்பை நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி உப்பு போட்டு கிளறவும்.
மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பிக்கும் போது கொத்தமல்லித் தழை தூவி அடுப்பை அணைத்து விட்டு பரிமாறவும்.