ரசப்பொடி இல்லாத ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - கெட்டியாக கரைத்தது ஒரு சிறிய டம்ளர்
துவரம் பருப்பு - 1 1/2 கப்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
மல்லி இலை - ஒரு கைப்புடி
கறிவேப்பிலை - 1/2 கைப்புடி
நெய் - தாளிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், தக்காளி, சிறிது மல்லி இலை சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
வெந்ததும் அதை மிக்சரில் ஸ்மூத்தா அரைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது ஆயில் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, சீரகம், மிளகு தாளித்து புளிக்கலவையை விட்டு கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போக ஆரமித்ததும் அரைத்த பருப்புக்கலவையை போட்டு, மூன்று பொடிகளும் சேர்த்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவு நீர் விட்டு ஒரு கலக்கு கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
நுரைத்ததும் இறக்கி மல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.