மைசூர் ரசம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி

கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - - 2 தேக்கரண்டி

வத்தல் - 4

புளி ஒருஎழுமிச்சை பழம் அளவு

கருவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - சிறிது

கொத்தமல்லி இலை - சிறிது

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

பின் 1/2 லிட்டர் தண்ணீரில் புளியை கரைத்துக்கொள்ளவும்.

2 வத்தல்,கொத்தமல்லி விதை,கடலைபருப்பு இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து பொடி செய்துக்கொள்ளவும்.

ஒரு சட்டியில் புளிகரைசலை ஊற்றி பெருங்காயம்,கருவேப்பிலை போட்டு கொதித்ததும்,வெந்தபருப்பை கடைந்துவிட்டு கொதிப்பதற்க்கு நுரைகட்டும் போது தயாராகவைத்திருக்கும் பொடி,உப்பு கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சிறிது கருவேப்பிலை, 2 வத்தல் போட்டு தாளித்து புளி கரைசலில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: