மைசூர் ரசம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

தக்காளி - 2

தனியா - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெல்லம் - சிறிது

நெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பை கரைய வேக விட்டு எடுக்கவும்.

புளியை 1 1/2 கப் தண்ணீரில் கரைக்கவும்.

புளித்தண்ணீரில் தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தனியா, சீரகம், மிளகு, மிளகாய், தேங்காய், கடலைப்பருப்பு எல்லாம் சேர்த்து வாணலியில் வறுத்து பொடியாக்கவும்.

புளித்தண்ணீர் கொதித்து பச்சை வாசம் போனதும், பருப்பை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, கரைத்து ஊற்றவும்.

பொடியாக்கியவற்றையும் வெல்லத்தையும் போடவும்.

நுரைத்து வரும் போது, இறக்கி நெய்யில் கடுகு தாளித்து கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: