மைசூர் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - நெல்லிக்காய் அளவு

துவரம் பருப்பு - கைப்பிடி

தக்காளி - 2

நெய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1 மேசைக்கரண்டி

வரமிளகாய் - 3

கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி

பெருங்காயம் - 2 கிள்ளு

கறிவேப்பிலை - 2 இதழ்

தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

தாளித்து ஊற்ற:

கடுகு - சிறிது

சீரகம் - 1 மேசைக்கரண்டி

நசுக்கிய பூண்டு - 5 பல்

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 2 இதழ்

செய்முறை:

புளியை ஊற வைக்கவும். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும்.

துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும்.

பின் அதே பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு சிறிது உப்பு போட்டு கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் வேக வைத்த பருப்பை போடவும்.

புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடம் கழித்து பின் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். தேவையான உப்பை போட்டுக் கொள்ளவும்.

இடையில் இன்னொரு சிறிய கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி தாளித்து ஊற்ற வேண்டிய பொருட்களை தாளித்து ரசத்தில் கொட்டவும். மல்லித் தழையை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

வேண்டுமெனில் ஒரு தேக்கரண்டி ரசப் பொடியையும் சேர்க்கலாம். இன்னும் மணம் தூக்கலாக இருக்கும்.