முருங்கைக்கீரை ரசம்
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1/2 கப்
எலுமிச்சை - 1
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பூண்டு - 3 பற்கள்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மல்லித் தழை (காம்புடன்) - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை:
முருங்கைக்கீரையுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்தெடுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகளைச் சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்கீரையை வேக வைத்த நீருடன் சேர்த்து, தேவையான அளவு சுடு நீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.
நுரை பொங்கி வரும் போது உப்பு சேர்த்து ஒரு கொதிவரவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
அவரவர் விருப்பத்திற்கேற்ப பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்த்தும் அரைக்கலாம்.
எலுமிச்சைக்குப் பதிலாக புளியை உபயோகிக்கலாம்.