முருங்கைக்கீரை சாறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை - 1 கப்

தேங்காய் - ஒரு மூடி

சின்ன வெங்காயம் - 8

பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1 தேக்கரண்டி

வரமிளகாய் - 2

புழுங்கலரிசி - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை உருவி, கழுவி நறுக்கவும். தேங்காயை துருவி ஒரு கப் முதல் பால் எடுக்கவும். இரண்டாவது பால் 3 கப் எடுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.

சோம்பு, வரமிளகாய், புழுங்கலரிசி இவை மூன்றையும் எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்ததை மிக்ஸியில் போட்டு அரைத்து பவுடர் பண்ணவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டாவது பாலை ஊற்றவும். பால் கொதி வந்ததும் கீரையை சேர்க்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். அரைத்த பவுடரை போட்டு அதோடு உப்பு சேர்க்கவும்.

கீரை நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். இப்போது முதல் பாலை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த முருங்கைக்கீரை சாறு சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.